புளோரிடா விமான நிலையத்திற்கு மண்டையோட்டுடன் வருகை தந்த பயணியால் அதிர்ச்சி!

அமெரிக்காவின் புளோரிடா விமான நிலையத்தில் சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் மண்டையோட்டுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளோரிடாவின் டம்பா சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது குறித்த மண்டையோடு மீட்கப்பட்டதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (CBP) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சடங்குகளின் குறிப்பிட்ட தன்மை CBP ஆல் தெளிவுபடுத்தப்படவில்லை என்றாலும், இந்த பொருட்கள் ‘சடங்குகளுக்கானவை’ என்று பயணி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடுமையான உடல்நல அபாயங்கள் காரணமாக அதிகாரிகள் எச்சங்களை கைப்பற்றி அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் குறித்த பயணி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வாரா என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
அமெரிக்காவில் தகனம் செய்யப்பட்ட அல்லது எம்பாமிங் செய்யப்பட்ட எச்சங்களைத் தவிர பிற மனித எச்சங்களை கொண்டு செல்லும்போது இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் வலைத்தளம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.