இலங்கை

விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பெரியாற்றுமுனை பள்ளிவாயலில் பொருத்தப்பட்டிருந்த கதவு (Gate) சிறுவன் மீது விழுந்ததில் சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரியாற்றுமுனை பள்ளிவாயலில் பொருத்தப்பட்டிருந்த கேட் மேல் ஏறி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது கேட் சிறுவன் மேல் விழுந்து காயம் அடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகாயம் அடைந்த சிறுவனுக்கு  11வயது எனவும் தெரியவருகின்றது.

குறித்த சிறுவனின் தலையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் குறித்த சிறுவன் அதி தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

(Visited 14 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்