துருக்கியில் அதிர்ச்சி – மது அருந்திய 37 பேர் மரணம் – 14 பேர் கைது
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மதுபானம் குடித்த 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 17 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக அந்நகர ஆளுநர் கூறினார். கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 77 பேர் மதுபானம் குடித்ததால் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் 23 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். மதுபானத்தில் Methanol எனும் நச்சுப் பொருள் கலந்தது சம்பவத்திற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
அதனால் கண் பார்வை, கல்லீரல் பாதிக்கப்படலாம். மரணம்கூட ஏற்படலாம். சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச் சாராயம் எனச் சந்தேகிக்கப்படும் சுமார் 14,700 போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
(Visited 2 times, 2 visits today)