இலங்கையில் அதிர்ச்சி – தாயும், மகளும் கொடூரமாக கொலை

இரத்தினபுரி – காவத்தையில் தாயும், மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
45 வயதான தாயும், 22 வயதான மகளும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், 28 வயதுடைய இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தில் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
(Visited 7 times, 1 visits today)