ஜெர்மனியில் அதிர்ச்சி – தந்தையை கொலை செய்த பிள்ளைகள்

ஜெர்மனி நாட்டில் பேர்ளின் நகரத்தில் 40 வயதுடைய தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை அவரது பிள்ளைகளே கொலை செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
அதன் அடிப்படையில் இந்த கொலை வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகின்து.
ஜெர்மனியின் தலைநகரமான பேர்லினில் மே 22 ஆம் திகதி 40 வதுடைய சிரியா நாட்டை சேர்நத நபர் ஒருவர் தமது பிள்ளைகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
அதாவது இந்த நபரானவர் பாக் ஒன்றுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார் என தெரியவந்திருக்கின்றது.
இந்த கொலை தொடர்பில் இவரது பிள்ளைகளான 16 வயது, 17 வயது மகன்களும் மேலும் இவரது மகள் மற்றும் இவரது மகனுடைய காதலி ஆகிய 4 பேரும் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் பொலிஸார் இந்த 4 பேரையும் கைது செய்து விசாரணையை நடத்தி வருவதாக தெரியவந்திருக்கின்றது.
(Visited 27 times, 1 visits today)