ஜேர்மனியில் அதிர்ச்சி – கிறிஸ்துமஸ் சந்தைக்குள் புகுந்த கார் – இருவர் பலி, 80 பேர் காயம்!

ஜேர்மனி – Magdeburg நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன் 80 பேர் காயமடைந்தனர்.
60 முதல் 80 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என ஜெர்மனியின் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரை செலுத்திச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் சவூதி அரேபியப் பிரஜை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் 2006ஆம் ஆண்டு ஜெர்மனிக்குச் சென்றவர் எனவும், அவர் 50 வயதுடைய வைத்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)