பிரான்ஸில் அதிர்ச்சி – வீடொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு – ஆபத்தான நிலையில் கணவர்

பிரான்ஸில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பாரிஸின் புறநகர் பகுதியான Franconville (Val-d’Oise) இல் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
45 வயதுடைய பெண் ஒருவர் பல தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கணவர் அதே வீட்டின் சமையலறையில் சுயநினைவு இழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவர் மனைவியை கொலை செய்துவிட்டு அதிக அளவிலான மருந்துகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மீட்கப்பட்டவர் 51 வயதுடையவர் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 21 times, 1 visits today)