பிரான்ஸில் அதிர்ச்சி – நெடுஞ்சாலையில் அகதிக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் A16நெடுஞ்சாலையில் வைத்து அகதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Loon-Plage (Nord) பகுதியில் குறித்த நெடுஞ்சாலையை அண்மித்துள்ள அகதிகள் முகாமுக்கு அருகே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த முகாமில் வசிக்கும் அகதி ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டபோது குறித்த அகதி காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மேற்குறித்த அகதிமுகாமில் 500 தொடக்கம் 600 வரையான அகதிகள் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)