பிரான்ஸில் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சி – 18 பேருக்கு 15 ஆண்டுகள் சிறை
பிரான்ஸில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 18 பேர் கொண்ட குழுவுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் கலே பகுதியில் இருந்து பிரித்தானியாவின் பல்வேறு கடற்கரை நகரங்களை நோக்கி பல ஆயிரம் அகதிகளை அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள், கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடல்மார்க்கமாக கிட்டத்தட்ட 10,000 அகதிகளை அவர்கள் கடத்தியுள்ளனர்.
50 அகதிகளை ஏற்றிக்கொண்டு ஒரு படகு பிரித்தானியாவைச் சென்றடைய அவர்கள் 100,000 யூரோக்கள் வரை சம்பாதித்ததாக அறிய முடிகிறது.
50 இடங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், 1,200 உயிர்காப்பு கவசங்கள், 150 காற்றடிக்கக்கூடிய படகுகள், 50 படகு இயந்திரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
(Visited 44 times, 1 visits today)