பிரான்ஸ் தலைநகரில் மர்ம நபரால் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மகளிர் தங்குமிடம் ஒன்றில் இருந்த பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுள்ளார்.
பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ல பெயர் குறிப்பிடப்படாத கல்லூரி மாணவிகள் தங்கியிருந்த மகளிர் விடுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று இரவு, தனது அறையில் தூங்கிக்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார். தற்போதே இது தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தீடீரென விழித்தெழுந்த அப்பெண், அதிர்ச்சியடைந்துள்ளதோடு, குறித்த நபரை எட்டி உதைத்துள்ளார்.
பின்னர் குறித்த நபர் ஜன்னல் வழியாக தப்பி ஓடியுள்ளார். அவர் ஜன்னல் வழியாகவே உள்ளே நுழைந்ததும் தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் 2 ஆம் வட்டார பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 16 times, 1 visits today)