இரண்டாவது திருமணமாக நடிகையை மணந்த சோயிப் மாலிக்

ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
2010-ம் ஆண்டு 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியருக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.
இதற்கிடையே, சோயிப் மாலிக்-சானியா மிர்சா ஜோடி முறைப்படி விவாகரத்து செய்துவிட்டனர்.
இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார்.
இதுதொடர்பான புகைப்படங்களை சோயிப் மாலிக் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
(Visited 11 times, 1 visits today)