இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் – அமெரிக்க ஜனாதிபதி விடுத்த உத்தரவு
அமெரிக்காவில் இருந்து இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் மோதி, இடிந்துவிழுந்த பால்ட்டிமோர் பாலத்தை ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் முதல்முறையாகப் பார்வையிட்டார்.
சுமார் 2 வாரத்துக்கு முன்னர் சரக்குக் கப்பலொன்று மோதியதில் பாலம் இடிந்துவிழுந்தது. அதன் இடிபாடுகளை அகற்றும் பணி இன்னமும் நடைபெறுகிறது.
அமெரிக்காவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்று பால்ட்டிமோர். பைடன், ஹெலிகாப்ட்டரில் இடிபாடுகள் இருக்கும் இடத்தைப் பார்வையிட்டார்.
பாலம் மீண்டும் கட்டப்படும் என்று அவர் உறுதிகூறினார். பாலம் இடிந்துவிழுந்ததற்குக் காரணமானோரை அதற்குப் பொறுப்பேற்கச் செய்வது முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த 8 ஊழியர்களின் குடும்பங்களையும் பைடன் சந்தித்தார்.
அந்த ஊழியர்கள் மெக்சிகோ (Mexico), குவாட்டமாலா (Guatemala), ஹொண்டுராஸ் (Honduras), எல் சல்வடோர் (El Salvador) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் நேர்ந்தபோது அவர்கள் பாலத்தில் பராமரிப்பு வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர்.