சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் கடத்தல்
கடத்தப்பட்ட ‘எம்வி லிலா நார்ஃபோக்’ என்ற சரக்குக் கப்பலை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
சோமாலியா கடற்பகுதியில் நேற்று மாலை கப்பல் கடத்தப்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், லைபீரிய கொடியுடன் கூடிய கப்பலில் 15 இந்திய பணியாளர்கள் உள்ளனர். “இந்திய கடற்படை விமானங்கள் கப்பலை கண்காணித்து வருகின்றன, மேலும் பணியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று ஒரு இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
இந்திய கடற்படை விமானம் கடத்தப்பட்ட கப்பலை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலும் நெருங்கிவிட்டது. இந்த கடற்பிராந்தியத்தில் பாதுகாப்பை மேற்கொள்ளும் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலைமையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச பங்குதாரர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளது.” இவ்வாறு இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்திய கடற்படை உடனடி பதில் நடவடிக்கையை எடுத்தது. கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி இந்திய கடற்படை விமானம் அனுப்பப்பட்டது. அதோடு, கடற்பாதுகாப்புக்கு உதவும் ஐஎன்எஸ் சென்னை என்ற போர்க் கப்பலும் திருப்பிவிடப்பட்டது. இந்திய கடற்படை விமானம், கடத்தப்பட்ட கப்பல் இருக்கும் இடத்தை இன்று அதிகாலை கண்டறிந்து அதனை கண்காணித்து வருகிறது. மேலும், கப்பலுக்குள் உள்ளவர்களோடு தொடர்பை ஏற்படுத்தி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.