கிரேக்கத்தில் வலி நிவாரண மருந்துகளுடன் கைப்பற்றப்பட்ட கப்பல்!

ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட படகு ஒன்றை பறிமுதல் செய்ததாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று டன்களுக்கும் அதிகமான நரம்பு வலிக்கான மருந்தான ப்ரீகாபலின் மருந்தை கைப்பற்றியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏதென்ஸுக்கு தென்கிழக்கே 70 கிலோமீட்டர் (43 மைல்) தொலைவில் உள்ள லாவ்ரியோ துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது மேற்படி மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்ஸ்யூல்கள் கிட்டத்தட்ட 3.15 டன் எடையுள்ள 500 அட்டைப் பெட்டிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
நீரிழிவு மற்றும் சிங்கிள்ஸ் போன்ற பல்வேறு நிலைகளால் ஏற்படும் நரம்பு வலிக்கு சிகிச்சையளிக்க Pregabalin பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)