சிங்கப்பூர் மக்களை அச்சுறுத்தும் நோய் – சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
																																		சிங்கப்பூரில் ஷிங்கிள்ஸ் (Shingles) எனப்படும் அக்கி நோய் காரணமாக அதிகளவான மக்கள் பாதிப்படைவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நோய் தொடர்பில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதில் மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நோய்த்தாக்கம் காரணமாக சிங்கப்பூரில் வருடாந்தம் 30,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, முன்னர் சின்னம்மை (Chickenpox) நோயால் பாதிக்கப்பட்டவர்களை, இந்த நோய் தாக்கும் போது அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்கி நோய் ஏற்படுபவர்களுக்கு நரம்புக் கோளாறு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் அக்கி நோயைக் கட்டுப்படுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் முதியவர்களுக்கு மானியம் அடிப்படையில் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நோயைத் தடுக்க தடுப்பூசி அவசியம் என நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
        



                        
                            
