இந்தியாவின் எதிர்ப்பினையும் மீறி இலங்கைக்கு வந்த ஷி யான் 6 ஆய்வு கப்பல்!
சீன ஆராய்ச்சிக் கப்பலான ‘ஷி யான் 6’ இன்று (25.10) இலங்கைக்கு துறைமுக சேவையை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த கப்பலானது இன்று பிற்பகலில் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது.
எவ்வாறாயினும், அக்டோபரில் சீனா துறைமுக அழைப்பை நாடிய போதிலும், ஷி யான் 6 இங்கு நவம்பரில் கப்பல்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டதாக இந்த மாத தொடக்கத்தில் அமைச்சர் சப்ரி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இந்த கப்பல் இலங்கை வருவதற்கு இந்தியா எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது. பாதுகாப்பு கவலைகளையும் எழுப்பியிருந்தது. இருப்பினும் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த கப்பல் கொழும்பிற்கு வருகை தந்துள்ளது.
சீனக் கப்பலான ஷி யான் 6 தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (NARA) இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.