கெர்சன் பிராந்தியத்தில் ஷெல் தாக்குதல் : 23 பேர் காயம்!

உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 23 போர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம தெரிவித்துள்ளது.
“பொது மக்களுக்கு எதிராக பீரங்கி பயன்படுத்தப்பட்டது,”உள்துறை அமைச்சகம் டெலிகிராமில் இட்டுள்ள பதிவில் தெரிவிதக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்களில், 15,11 வயதுடை இரு ஆண்குழந்தைகளும், 16 வயது சிறுமியும், அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)