செய்தி வட அமெரிக்கா

$100 பில்லியன் செல்வத்தை எட்டிய உலகின் முதல் பெண்மணி

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வணிக, பொருளாதார, பங்கு சந்தை ஊடகம், ப்ளூம்பர்க் (Bloomberg).

இந்நிறுவனம், உலகின் முன்னணி கோடீசுவரர்களை, அவர்களின் நிகர சொத்து மதிப்பை வைத்து உருவாக்கும் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம்.

இப்பட்டியலின்படி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபேஷன் ஆடை மற்றும் ஒப்பனை துறையில் முன்னணியில் உள்ள லோரியல் (L’Oreal) நிறுவனத்தின் தலைவரான, 70 வயதாகும் ஃப்ரான்காய் பெட்டன்கோர்ட் மேயர்ஸ், 100 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு பெற்ற முதல் பெண்மணியாக இடம் பிடித்துள்ளார்.

மேயர்ஸ், உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ள 268 பில்லியன் டாலர் நிறுவனமான லோரியல் தலைமை பொறுப்பை அவரது இரு மகன்களுடன் நிர்வகித்து வருகிறார்.

2017ல் தன் தாயிடமிருந்து லோரியல் நிர்வாக பொறுப்பை ஏற்ற மேயர்ஸ், இன்று வரை திறம்பட நிர்வகித்து வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் ஒப்பனை பொருட்களுக்கான தேவை குறைந்திருந்தாலும், சில மாதங்களிலேயே விற்பனையை பல மடங்கு உயர்த்தி காட்டினார் மேயர்ஸ்.

பெட்டன்கோர்ட் மேயர்ஸ், உலகின் பல செல்வந்தர்களால் தேடப்படும் பளபளப்பான சமூக வாழ்க்கையைத் தவிர்த்து, தனது வாழ்க்கையை தனிப்பட்டதாக வைத்திருக்கிறார்.

அவர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்,பைபிளின் ஐந்து தொகுதி ஆய்வு மற்றும் கிரேக்க கடவுள்களின் வம்சாவளி.

மேலும் ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் பியானோ வாசிப்பதில் பெயர் பெற்றவர்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி