ஜனவரிக்கு பின் முதல் முறையாக உச்சம் தொட்ட பங்குகள் – இலங்கையின் இன்றைய பங்குசந்தை நிலைவரம்!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 2022 ஜனவரி 31க்குப் பின்னர் முதல் தடவையாக இன்று (13) 13,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
அதன்படி, குறியீட்டு எண் 136.20 புள்ளிகள் அதிகரித்து 13,125.19 புள்ளிகளில் நிறைவடைந்தது.
அன்றைய வர்த்தகம் 6.9 பில்லியன் ரூபாவாகும்.





