சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை: பாதிரியாரை தேடும் பிலிப்பைன்ஸ் பொலிசார்
மிண்டானாவோ தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு நகரம்.
இந்நகரம் தற்போது ஒமேகா டி சலோனெரா என்றும் முன்பு சோக்கோரோ பயனிஹான் சர்வீசஸ் என்றும் அழைக்கப்படும் ஒரு மத அமைப்புக்கு தாயகமாக உள்ளது.
அதன் தலைவரான ஜெய் ரென்ஸ் பி குய்லாரியோ, ஆயுதமேந்திய காவலர்களால் சூழப்பட்ட மலைப்பகுதியில், அவரைப் பின்பற்றுபவர்களைத் தவிர வேறு யாரும் எளிதில் நுழைய முடியாது.
2019ஆம் ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்துக்குப் பிறகு, உலகம் அழியப் போகிறது என்று அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களை மூளைச் சலவை செய்து அதிலிருந்து தப்பிக்க தன்னிடம் சரணடையச் செய்தார்.
தன்னை இயேசுவின் மறு அவதாரம் என்று அறிவித்த குய்லாரியோ அவரைப் பின்பற்றுபவர்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.
உறுப்பினர்களிடமிருந்து நிதி திரட்டுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் நிதியளிக்கப்பட்ட இந்த அமைப்பு சுமார் 1,600 குழந்தைகள் உட்பட 3,500 க்கும் மேற்பட்ட விசுவாசிகளைக் கொண்டுள்ளது.
சில நாட்களுக்கு முன், 8 குழந்தைகள் அங்கிருந்து தப்பியோடினர். அங்கு நடக்கும் கொடுமைகள் குறித்து பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குயிலிரியோ சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சிறுமிகளின் பெற்றோரின் சம்மதத்துடன் உள்ளூர் ஆண்களுக்குகட்டாய திருமணம் செய்ததாகவும், மலைப்பகுதியில் வசிக்கும் மற்ற பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளன.