இலங்கை

விளையாட்டில் தோற்ற சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் – 4 சிறுவர்கள் உட்பட ஐவர் கைது !

மட்டக்களப்பு – வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட 5 பேரில் 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன் 18 வயதுயை ஒருவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கணவனை இழந்த தாயார் ஒருவர் அவரது 7 வயது சிறுமியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தினமும் வேலைக்கு சென்றுவரும் நிலையில் சிறுமியுடன் அந்தபகுதியைச் சேர்ந்த 11 சிறுவனுடன் விளையாட்டில் தோல்வியடைந்த தண்டனை என்ற ரீதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மோற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுவன் எனைய 14,15,18 வயதுடைய நண்பர்களுக்கும் இந்த சூட்சமத்தை தெரிவித்துள்ளதையடுத்து குறித்த சிறுமியுடன் தனிதனியாக சிறுவர்கள் சென்று விளையாட்டு என்ற பேர்வையில் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் இதனை அவதானித்த அந்தபகுதி இளைஞன் ஒருவர் சிறுமியின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Drunk Policeman Assaults Family, Tied Up by Wife and Daughters, Arrested by  Colleagues - slcat

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறையிட்ட தையடுத்து 11 வயதுடைய ஒருவரையும், 14 வயதுடைய இருவரையும் 15 வயதுடைய ஒருவரையும் 18 வயதுடைய ஒருவர் உட்பட 5 பேரை நேற்று புதன்கிழமை (13) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிநீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களையும் சட்ட வைத்தியரிடம் சேதனைக்கு உட்படுத்துமாறும், அடுத்த வழக்கிற்கு ஆஜராகுமாறும் பிணையில் விடுவத்ததுடன் 18 வயதுடையவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content