14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை
கல்முனையில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை குறித்த சிறுமி 3 தடவைகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதால்
சிறுமி கர்ப்பமடைந்து ஆண் குழந்தையொன்றையும் பிரசவித்துள்ளார்.
குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமியின், சகோதரியின் 27 வயதுடைய கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் ஆஜராகியிருந்தார்.இதன் போது ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 10,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த தண்டப்பண தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா நஸ்டஈடு தொகையும் வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
நட்டஈடு செலுத்தாத பட்சத்தில் 3 குற்றச்சாட்டிற்கும் தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.





