இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்!

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின் அறிவிப்பின்படி நேற்று மட்டும் 06 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பற்றிய முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, 05 சம்பவங்கள் காதல் உறவுகள் காரணமாகவும், மற்ற சம்பவம் பலவந்தமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த அனைத்து சம்பவங்களிலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட சிறுமிகள் 12, 14, 15 மற்றும் 17 வயதுடையவர்களாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போதிலும் இரண்டு வருடங்கள் கழித்து முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த 06 சம்பவங்கள் ஆனமடுவ, தெபுவன, கம்பளை, பயாகல மற்றும் தமன காவல் நிலையங்களில் இருந்து பதிவாகியுள்ளன.
இந்நிலையில் வீட்டில் இருப்பவர்கள் தங்களின் குழந்தைகளின் நலன் தொடர்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.