பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – லண்டனில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள ஈழத்தமிழர்!
பிரான்ஸில் குழந்தை ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுஜந்த் கேதீஸ்வரராசா என்ற 30 வயதுடைய ஈழத்தமிழர் ஒருவர் மேற்படி குற்றச்சாட்டின் கீழ் லிவர்பூல் (Liverpool) நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு அதிகாரிகள் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் அவரை தேடி வருவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அவர் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது நாடு கடத்தல் செயன்முறை தொடங்கும் வரை அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் வரும் 27 ஆம் திகதி (வியாழக்கிழமை) வீடியோ இணைப்பு மூலம் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
மேலும் குறித்த வழக்கு தொடர்பான முழுமையான விசாரணை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




