ஜப்பானில் கடுமையான அரிசி பற்றாக்குறை – அரசாங்கம் எடுத்த நடவடிக்கை
ஜப்பானில் அரிசி இருப்பு குறைந்து வருவதால், அரசிக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலைமையை சமாளிக்க அரிசி இறக்குமதியை அதிகரிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
தட்டுப்பாடு காரணமாக அதிகரித்த அரிசி விலையைக் கட்டுப்படுத்த, கையிருப்பில் உள்ள அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக அரசு வெளியிட்டது.
இதனால், அரிசி கையிருப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன்னாகக் குறைந்துவிட்டது.
இதையடுத்து, மிக அவரசமாக அரிசி இறக்குமதியை அதிகரிக்க உள்ளதாக ஜப்பான் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் டன் அரிசியை வரியின்றி இறக்குமதி செய்துகொள்ளலாம் என்ற உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் கீழ் ஜப்பான் அரசு அரிசியை இறக்குமதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





