தென்கொரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு : 14 பேர் பலி, பலர் மாயம்!

தென் கொரியாவில் ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் காணாமல் போனதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
சியோலின் வடகிழக்கே உள்ள கேப்யோங் நகரில், வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை தெற்கு நகரமான சான்சியோங்கில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள், வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்ததாகவும், இதில் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் ஆறு பேர் காணாமல் போனதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேப்யோங் மற்றும் தெற்கு நகரமான குவாங்ஜுவில் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
இதேவேளை தெற்குப் பகுதிகளில் சுமார் 600-800 மில்லிமீட்டர் (24-31 அங்குலம்) வரை மழை பெய்துள்ளதாக அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.
(Visited 1 times, 1 visits today)