காசாவில் நிலவும் கடும் பஞ்சம் – போர் நிறுத்தத்தை ஏற்க அதிக அழுத்தத்தை எதிர்கொள்ளும் இஸ்ரேல்!

காசாவில் நிலவும் பஞ்சத்தின் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தத்தை ஏற்க அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.
இஸ்ரேலின் உதவித் தடை மற்றும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் அமெரிக்காவிடம் இருந்து பெஞ்சமின் நெதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நிபுணர் அலி சௌஃபானால் நடத்தப்படும் சௌஃபான் மையம், பஞ்சம் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவிலிருந்து பின்வாங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே காசாவில் இஸ்ரேலின் இராணுவ ஈடுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் பரந்த அழுத்தத்தை எதிர்கொள்கிறார்” என்று கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)