ஐரோப்பிய ஒன்றிய சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கைது : பின்னணியில் இருக்கும் சீன நிறுவனம்!

சீனாவின் Huawei நிறுவனம் ஐரோப்பிய ஒன்றிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜிய கூட்டாட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரஸ்ஸல்ஸ், ஃப்ளாண்டர்ஸ், வாலோனியா மற்றும் போர்ச்சுகலில் ஃபெடரல் போலீஸ் அதிகாரிகள் 21 சோதனைகளை மேற்கொண்டதாக கூட்டாட்சி வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகளுடன் மோசடி மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் எதிர்கொள்வதாக வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சீன தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei-க்காக பணிபுரியும் பரப்புரையாளர்கள் ஐரோப்பாவில் நிறுவனத்தின் வணிகக் கொள்கையை மேம்படுத்துவதற்காக தற்போதைய அல்லது முன்னாள் MEP-களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.