ஆஸ்திரேலியாவில் பாறையில் பல டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பாடசாலையில் உள்ள ஒரு பாறையில் பல டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாறை 20 ஆண்டுகளாகப் பாடசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது, மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இது 200 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
47 தனிப்பட்ட டைனோசர்களின் 66 கால்தடங்கள் அங்கு காணப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கால்தடங்களுடன் கூடிய புதைபடிவ எலும்புகள் எதுவும் காணப்படாததால், இந்த டைனோசர் எந்த இனத்தைச் சேர்ந்தது என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
மூன்று விரல்களைக் கொண்ட கால்தடங்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு, இந்த டைனோசர்கள் 20 முதல் 76 சென்டிமீட்டர் உயரம் கொண்டவை என்று ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த டைனோசர்கள் மணிக்கு 2 முதல் 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்ததாகவும் ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.