இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பலர் கைது! ஆயுதங்கள் கைப்பற்றல்

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 28 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உட்பட மூவர் பல ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச ரீதியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி தோட்டா மற்றும் மகசீன், 12 போர் துப்பாக்கியின் 06 தோட்டாக்கள் மற்றும் கையடக்க தொலைபேசியுடன் 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது எண்தன பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று மாலை அக்மீமன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 69 தோட்டாக்கள், இரண்டு ரிவோல்வர்கள், ஒரு ஏர் ரைபிள், 12 போர் துப்பாக்கியின் 50 தோட்டாக்கள் மற்றும் பல கத்திகளுடன் கைத்துப்பாக்கியுடன் 73 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்மீமன பகுதியைச் சேர்ந்த நபரே மேல் மாகாண தென் குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கோனகங்கர பிரதேசத்தில் T-56 துப்பாக்கியின் 07 தோட்டாக்கள் உட்பட பல வகையான உயிருள்ள தோட்டாக்களுடன் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தல பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.