செவ்வந்தி தலைமறைவாகியிருக்க உதவிய கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 07 பேர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் வாக்குமூலத்தினுடான பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
அத்துடன், அவர் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பில் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேபாளத்திலிருந்து கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
அதற்கமைய, கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர், நாட்டின் சில பகுதிகளில் இஷாரா செவ்வந்தி தலைமறைவாயிருந்தார்.
அதன்படி, மித்தெனிய, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என அவர் தங்கியிருந்த பகுதிகளில் உதவி புரிந்தவர்கள் கைது செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இஷாரா தங்கியிருந்த பகுதிகளுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.