செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தொடர் பாலியல் வன்கொடுமைகள் – திமுகவை கண்டித்து அதிமுக போராட்டம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்ட முறைகேடுகள் மற்றும் போதைப்பொருட்கள் புழக்கம் போன்றவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட அதிமுக தீர்மானித்துள்ளது.

இதன்படி, வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நாளை போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

“2021 ஆம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டினுடைய முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், திமுகவினுடைய ஆட்சியில் தமிழ் நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது எனவும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தெருக்களில் போதைப்பொருள் புழக்கம் இல்லாத இடமே இல்லை என்கிற நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறதெனவும் அவர் குற்றம்
சுமத்தியுள்ளார்.

கல்லூரி மற்றும் பாடசாலை மாணவர்களும் போதைப்பொருட்களை சாதாரணமாக பயன்படுத்துகிற செய்திகளும், காட்சிகளும் நாட்டின் முக்கிய ஊடகங்களிலேயே வெளியிடப்பட்டு வருவதாகவும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கவலை வெளியிட்டுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!