ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த சியோல் பேருந்து ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம
சியோலில் உள்ள ஆயிரக்கணக்கான பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் மணிநேர வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டுள்ளனர்..
ஊதிய உயர்வு தொடர்பாக அவர்களது தொழிற்சங்கம் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொண்டதை தொடர்ந்து வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்தது.
தென் கொரிய தலைநகரில் 97 சதவீத பேருந்து வழித்தடங்கள் தடைபட்டதால், காலை நெரிசல் நேரத்தில் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து இந்த உடன்பாடு ஏற்பட்டது.
இது 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட முதல் பொது வேலைநிறுத்தம் இதுவாகும்.
சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதை அடுத்து, ஓட்டுநர்கள் 12.7 சதவிகித மணிநேர ஊதிய உயர்வைக் கோரினர்.
பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியது, ஓட்டுநர்கள் 4.48 சதவீத அதிகரிப்பு மற்றும் இரண்டு முக்கிய விடுமுறைகளுக்கு போனஸை ஏற்றுக்கொண்டதாக சியோல் நகர அரசாங்கம் தெரிவித்துள்ளது.