இலங்கை ஐரோப்பா

விபத்தில் சிக்கி ஈழத் தமிழ் மூத்த ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் உயிரிழப்பு

ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் IBC வானொலியில் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன் லண்டனில் அகால மரணமடைந்தமை புலம்பெயர் ஊடகத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தனது வீட்டில் இருந்து நேற்று(01) நடை பயிற்சிக்காக சென்றபோது மின்வண்டி மோதியதால் உயிரிழந்துள்ளார்.

இலங்கை வானொலியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் தனது 75 வயதில் மறைந்துள்ளார்.இலங்கை வானொலிக்கு பின்னர் BBC தமிழோசையில் பணிபுரிந்த விமல் சொக்கநாதன் அதன் பின்னர் IBC வானொலி TTN தொலைக்காட்சி, ஜிரிவி தொலைக்காட்சி மற்றும் IBC தொலைக்காட்சி ஆகிய புலம்பெயர் ஊடகங்களில் செய்தி மற்றும் நடப்புவிவகார தளத்தில் தனித்து சேவையை வழங்கியவர் ஆவார்.

விமல் சொக்கநாதனின் மரணம் புலம்பெயர் ஊடகத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அவரது மறைவை முன்னிறுத்திய இரங்கல் செய்திகளை அவரது ஊடகத்துறை நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் இலங்கையில் தனது நூல் வெளியீட்டை நடத்திய விமல் சொக்கநாதன் கடந்த மே மாதம் யாழ் கலையகத்துக்கு வருகை தந்து சிறப்புச் செவ்வியொன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 86 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்