அரை இறுதிச் சுற்று இன்று ஆரம்பம்: நியூசிலாந்து. தென்னாபிரிக்கா மோதல்!
ICC T20உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்காSouth Africa – நியூசிலாந்து New Zealand அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் Eden Gardens மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாபிரிக்கா அணி நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணியாக வலம் வருகிறது.
லீக் சுற்றில் 4 ஆட்டங்கள், சூப்பர் 8 சுற்றில் 3 ஆட்டங்கள் என தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது.
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி லீக் சுற்றில் 3 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்தது. தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானுடன் மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்தானது.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கண்ட நிலையில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. எனினும் நிகர ரன் ரேட் காரணமாக பாகிஸ்தான் அணியை தொடரில் இருந்து வெளியேற்றி அரை இறுதி வாய்ப்பை பெற்றிருந்தது நியூசிலாந்து அணி.
T20 உலகக் கிண்ண வரலாற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தென்னாபிரிக்கா அணி 5 முறை மோதி உள்ளது. இதில் அனைத்திலும் தென்னாபிரிக்கா அணியேவெற்றிபெற்றுள்ளது.





