இலங்கை

இலங்கையில் போலி மாணிக்கக்கல் விற்பனை: இருவர் கைது!

போலியான மாணிக்கக்கல் ஒன்றை உயர் பெறுமதியான மாணிக்கக்கல் எனக் கூறி, விற்பனை செய்யத் தயாரான இருவரை ஆனமடுவ போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு (23) இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் ஆனமடுவ நகரிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு போலியான மாணிக்கக்கல்லை ஒரு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.

இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட வர்த்தகர் காவல்துறையினருக்கு அறிவித்தார்.

ஆனமடுவ பரமாகந்த கிராமத்தைச் சேர்ந்த 34 மற்றும் 38 வயதுகளையுடைய பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் ஆனமடுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content