தென்கொரியாவில் நாய் இறைச்சி விற்பனை முடிவுக்கு வருகின்றது
தென்கொரியாவில் நாய்களை வெட்டுவது தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்தப் புதியச் சட்டம் 2027ஆம் ஆண்டுக்குள் நாய்களைக் கொன்று அவற்றின் இறைச்சி விற்பனையை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் நாய் இறைச்சியை உண்ணும் பல நூற்றாண்டு பாரம்பரியம் முடிவுக்கு வரும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டில் பெரும்பான்மையான இளைஞர்கள் நாய் இறைச்சியை மறுக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர, சம்பந்தப்பட்ட சட்டத்தை மீறுவோருக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட உள்ளது.
(Visited 7 times, 1 visits today)