இலங்கை

நுவர்வோருக்கு விற்பனை செய்யும் கொத்தமல்லியில் இரசாயணங்கள் கலந்து விற்பனை!

உணவிற்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லியுடன் கந்தகதூள் கலந்து விற்பனை செய்த நபர் ஒருவர் மட்டகளப்பு, கல்முனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிறையை அதிகரிப்பதற்காக கொத்தமல்லியுடன் இரசாயனங்கள் கலந்திருப்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திருக்கோவில் முகாமை சேர்ந்த அதிகாரிகள் குழு மற்றும் அம்பாறை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் குழு நேற்று (08.08) இரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்ட் சீஷோர் வீதி பகுதியில் உள்ள களஞ்சியசாலையில், நுவர்வோர் பாவனைப் பொருட்களில் இரசாயணங்கள் கலந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த களஞ்சியசாலைக்கு பொறுப்பான 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனையின் போது சந்தேகநபர் விற்பனைக்காக வைத்திருந்த கிடங்கில் இருந்து 2,125 கிலோ கந்தகத்தூள் கலந்த 2,125 கிலோ மல்லி, 8,275 கிலோ தரமற்ற கொத்தமல்லி, 225 கிலோ கந்தக தூள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 18 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்