பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம் – சீமான் குற்றச்சாட்டு.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்குத் தி.மு.க.வே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார். திருச்சியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்
தமிழகத்தின் கடன் சுமை 10 இலட்சம் கோடி ரூபாயை அண்மித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது பா.ஜ.க.” என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாராட்டியதைக் குறிப்பிட்ட சீமான், நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பவர்கள் ஜாதி, மதம், கடவுளைப் பற்றிச் சிந்திக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், காவிரி நீர் பிரச்சினைக்காக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார.




