பாக்கிஸ்தானில் தொகுப்பாளர்கள் இருவர் மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கு
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 9ம் திகதியன்று நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பல இடங்களில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
போராட்டம் நடைபெற்று ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது அங்குள்ள ஆப்பாரா பொலிஸ் நிலையத்தில் சபீர் ஷாகிர் மற்றும் மொயீத் பிர்சாதா ஆகிய 2 பேர் மீது கலவரத்தை தூண்டுதல், தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதத்தை பரப்புதல் ஆகிய பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் டிவி சேனலில் தொகுப்பாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.




