பிரித்தானியாவின் அஜாக்ஸ் (Ajax) கவச வாகனங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்!
பிரித்தானிய இராணுவம் அஜாக்ஸ் (Ajax) கவச வாகனங்களைப் பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.
சாலிஸ்பரி (Salisbury) சமவெளியில் சமீபத்தில் நடந்த போர் பயிற்சியின் போது சுமார் 30 வீரர்கள் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் இருந்து வரும் சத்தம் மற்றும் அதிர்வு காரணமாக பணியாளர்கள் உடல்நிலை பாதிப்பை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகம் இந்த வாகனங்களின் பயன்பாட்டை இரண்டு வாரக்காலப்பகுதிக்கு இடைநிறுத்தியுள்ளதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த வகையான வாகனங்கள் £6.3 பில்லியன் பொருட் செலவில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




