தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இந்திய அரசு வழங்கிய பாதுகாப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கி இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்து அதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளார்.
மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது முதல் தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு வரை பல்வேறு விடயங்களை செய்து வருகிறார். மேலும், கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பாதுகாப்பில் விஜய்க்கு, CRPF வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பார்கள். மேலும், இந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும்.