தென்கொரிய அதிபர் அலுவலகத்தில் சோதனை நடத்துவதை தடுத்த பாதுகாப்பு அதிகாரிகள்
தென்கொரியாவில் கடந்த வாரம் ராணுவச் சட்டம் கொண்டுவர முயற்சி செய்ததற்காக அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் விசாரிக்கப்பட்டு வருகிறார். தற்போது, பதவியில் இருக்கும்அரசாங்கத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாக யூன்மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.
டிசம்பர் 3ஆம் திகதி இரவு ராணுவ ஆட்சியை அறிவித்த யூன், தேசிய தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கும் தேசிய நாடாளுமன்றத்துக்கும் படைகளை அனுப்பியதாக குற்றச்சாட்டில் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவருடைய அலுவலகத்திற்குள் நுழைந்து தென்கொரிய அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள முயன்றனர்.
ஆனால், அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை இடைமறித்து தடுத்ததாகவும் சில இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கவில்லையெனவும் முழுமையான விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை எனவும் தென்கொரியக் காவல்துறை புதன்கிழமையன்று (டிசம்பர் 11) தெரிவித்தது.
அதிபர் யூனுக்கும் அவரது மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விரு நடவடிக்கையால் தென்கொரிய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.