பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!! பொலிசார் குவிப்பு
பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகரில் சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்சின் தேசிய தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதன் அரசு விழா தலைநகர் பாரிசில் நடைபெறுகிறது.
அதே நேரத்தில், தலைநகர் உட்பட பிரான்சின் பாதுகாப்பிற்காக 30,000 பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், மேலும் பாதுகாப்புக்காக ஹெலிகாப்டர்கள் அடங்கிய சிறப்பு பாதுகாப்பு பட்டாலியனும் அழைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக பிரான்சில் 17 வயது இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததையடுத்து அங்கு அமைதியின்மை நிலவுகிறது.
இவ்வாறான பின்னணியில் தேசிய தின கொண்டாட்டம் நடைபெறுமா என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பிரான்சில் நாளை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, இந்த தேசிய தினத்திற்காக இந்தியாவுக்கு பிரான்ஸ் சிறப்பு அழைப்பை விடுத்துள்ளது.
அதன்படி நாளை நடைபெறும் தேசிய தின அரச விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக பங்கேற்க உள்ளார்.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் பிரான்ஸ் சென்றதாக இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பிரதமரின் பிரான்ஸ் பயணத்துடன் இந்திய .ராணுவக் குழுவும் பிரான்ஸ் சென்றுள்ளது.
நாளை பிரான்ஸ் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.