வடக்கு கொலம்பியாவில் இரகசிய பாதாள அறை – சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி
வடக்கு கொலம்பியாவில் இரகசிய பாதாள அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் எடை கொண்ட கோகெய்ன் போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்கச் சந்தைகளில் விற்பனை செய்ய இந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களால் ஒரு மரவீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் சந்தை மதிப்பு 150 மில்லியன் டொலர் என்று கொலம்பியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
(Visited 7 times, 1 visits today)