அலெப்போ மோதல் – பின்வாங்க ஒப்புக்கொண்ட SDF படைகள்
சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் அரசாங்கப் படைகளுடன் பல நாட்கள் நடந்த கடும் மோதல்களுக்குப் பிறகு, சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) போர்நிறுத்த ஒப்பந்தமொன்றின் கீழ், நகரிலிருந்து பின்வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு முழுவதும் பேருந்துகள் மூலம் பின்வாங்கும் நடவடிக்கை ஒருங்கிணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அலெப்போ நகரம் SDF போராளிகள் இல்லாத பகுதியாக மாறியுள்ளதாக அந்த நகரின் ஆளுநர் அஸ்ஸாம் அல்-கரிப் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல்களில் பலர் உயிரிழந்ததாகவும், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் குர்திஷ் படைகளை அரசு அமைப்புகளில் மீண்டும் இணைப்பதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வராததால் ஏற்பட்ட பதற்றமே இந்த மோதல்களுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியில், அலெப்போவின் ஷேக் மக்சூத், அஷ்ரஃபிஹ் மற்றும் பானி ஜைதி ஆகிய குர்திஷ் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடும் மோதல்கள் வெடித்தன.





