இந்தியா

பால்கனியில் கேட்ட அலறல்… சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டார் அதிர்ச்சி!

இந்திய மாநிலம், உத்தர பிரதேச மாநிலத்தில் நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, 3வது மாடியில் இருந்து நாயை கீழே வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயதான இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் 3வது மாடியில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது, பக்கத்து வீட்டார் வந்து பார்த்த போது இளைஞர் ஒருவர் வீட்டின் பால்கனியில் நாயை வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, பக்கத்து வீட்டார் அபாய ஒலியை ஒலிக்க செய்ததும், நாயை 3வது மாடியில் இருந்து இளைஞர் கீழே வீசினார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டார் படுகாயங்களுடன் இருந்த நாயை மருத்துவமனையில் அனுமதித்தனர். இளைஞர் குறித்து பொலிசில் புகார் அளித்தனர்.

https://twitter.com/i/status/1717507674101907701

இதனைத்தொடர்ந்து, இளைஞரின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 (எந்தவொரு ஆண், பெண் அல்லது மிருகத்துடன் இயற்கையின் ஒழுங்குக்கு எதிரான உடலுறவு) கீழ் ஒரு வழக்குப் பதிவும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960ன் கீழ் ஒரு வழக்கும் பதிவும் செய்யப்பட்டது.

பின்பு, அந்த இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பொலிசார் பேசுகையில், இளைஞரை கைது செய்த போது அவர் மது போதையில் இருந்தார் என கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!