ஸ்கொட்லாந்தில் வாரத்திற்கு 04 நாள் பாடசாலைகளை நடத்த பரிசீலனை!
ஸ்கொட்லாந்து அரசாங்கம் வாரத்தில் நான்கு நாட்கள் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் நல்வாழ்வு குறித்து வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த சோதனை முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கற்பித்தல் மிகவும் மன அழுத்தமான தொழில்களில் ஒன்றாக உள்ளது, ஊழியர்கள் தொழிலை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணங்களாக மன அழுத்தம் மற்றும் சோர்வை குறிப்பிடுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு நான்கு நாட்கள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கமைய வாரத்திற்கு 28-32 மணிநேரமாக வேலைநேரம் குறைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா (Australia) , கனடா (Canada) , அயர்லாந்து (Ireland), நியூசிலாந்து (New Zealand) , UK மற்றும் USA ஆகிய நாடுகளின் ஆராய்ச்சிகளும் நான்கு நாள் வேலை வாரத்தை ஏற்றுக்கொள்வதால் இந்த திட்டத்தை சோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




