அமெரிக்காவில் வாட்டி வதைக்கவுள்ள வெப்பம் – 30 மில்லியன் மக்களுக்கு பாதிப்பு
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா முதல் வடக்கு இடாஹோ வரையிலான நகரங்கள் அடுத்த சில நாட்களில் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அதிக வெப்பநிலை காரணமாக 30 மில்லியன் மக்களுக்கு சுகாதார அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கலிபோர்னியா, அரிசோனா, நெவாடா, இடாஹோ, ஓரிகான் மற்றும் வாஷிங்டன் போன்ற இடங்களில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.
மத்திய ஓரிகான் மற்றும் வாஷிங்டனின் சில பகுதிகள் வெப்பம் மற்றும் வறண்ட சூழல் காரணமாக காட்டுத்தீ அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
மேலும் கிழக்கு ஓரிகானில் காட்டுத்தீ பரவுவதால் அதிகாரிகள் வெளியேற்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
(Visited 5 times, 1 visits today)