டுபாயில் வாட்டி வதைக்கும் வெப்பம் – இரவில் திறந்துவிடப்படும் கடற்கரை
டுபாயில் பகலில் வெப்பம் வாட்டியெடுப்பதால் மக்கள் கடும் நெருக்கடிக்கள்ளாகியுள்ளனர்.
இந்த கடற்கரைப் பகுதிகளை இரவுநேரத்தில் திறந்துவிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதற்காகப் பல வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணத்துக்குச் சுறா வலைகள், பெரிய விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
தொலைநோக்கிகளை வைத்துள்ள பாதுகாவல் அதிகாரிகள் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆபத்துகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் அவர்கள் பரிசீலிக்கின்றனர்.
டுபாயில் அந்த முயற்சிகள் அனைத்தும் நல்ல பலனைக் கொடுத்துள்ளன.
கடந்த ஆண்டிலிருந்து இதுவரை டுபாயில் இரவில் கடலுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியிருப்பதாக AFP செய்தி கூறுகிறது.
சுமார் 3.7 மில்லியன் மக்களைக் கொண்ட டுபாயில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் வெப்பம் கடுஞ்சவாலாக இருந்துவருகிறது.